தோட்டத் தொழிலாளா்களுக்கு முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது போல 730 ரூபாய் வேண்டாம் என்றும் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1000 ரூபாய் சம்பளமும் 6 நாள் வேலையும் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தோட்டத் தொழிலாளா்கள் இன்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- தமக்கு 1000 ரூபா சம்பள உயா்வு
- 18 மாதங்களுக்கான சம்பள நிலுவை
- வாரத்தில் 6 நாட்கள் போன்றவை கிடைப்பதற்கான பேச்சு வார்த்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படுமானால் தாம் போராட்டத்தை கைவிடுவதாக தொழிலாள்கள் அறிவித்துள்ளனா்.
1000 ரூபாய் சம்பள உயா்வு கோரிய பெருந் தோட்டத் தொழிலாளா்களின் போராட்டம் கடந்த 10 தினங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும், அவா்களின் சம்பளத்தை 100 ரூபாவால் அதிகரித்து 730 ரூபாய் நாள் சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளதாக அமைச்சார் W.D.J. செனவிரத்ன நேற்று தெரிவித்தார்.