Friday, October 7, 2016

குப்பி விளக்கில் படித்தேன், செருப்­பு­டன்தான் பாட­சாலை சென்றேன் - மைத்திரிபால சிறிசேன உருக்கம்.

நான்  எனது கிராமப் பாட­சா­லை­யி­லேயே பயின்றேன். எனது வீட்டில் மின்­சாரம் இல்லை. குப்பி விளக்­கொ­ளி­யி­லேயே  நான் பாடங்­களைப் படிப்பேன். அரைக்­காற்­சட்டை, செருப்­பு­டன்தான் பாட­சாலை செல்வேன் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

சர்­வ­தேச ஆசி­ரியர் தினத்தை முன்­னிட்டு கொழும்பு தாமரைத் தடாக மண்­ட­பத்தில் நடை­பெற்ற "குரு பிர­தீபா பிரபா "விருது வழங்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


ஜனா­தி­பதி மேலும் உரை­யாற்­று­கையில், 

எமது நாட்டு கல்­வித்­து­றையில் எவ்­வ­ளவோ மாற்­றங்கள் செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது. பாட­சா­லை­களில் பிள்­ளை­களைச் சேர்ப்­ப­தி­லி­ருந்து பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. நான் அண்­மையில் வழி­பாடு ஒன்­றுக்­காக கதிர்­காமம் சென்றேன். அப்­போது அங்கு வழி­பாட்டில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த இளம் பெண்­மணி ஒருவர் ஓடி­வந்து நான் தெய்­வத்­திடம் வேண்­டியபடியே நீங்கள் இங்கு வந்து விட்­டீர்கள். எனது பிள்­ளையை ஒரு
பாட­சா­லையில் சேர்க்க வேண்­டினேன். எப்­ப­டி­யா­வது என் பிள்­ளையை ஒரு பாட­சா­லையில் சேர்த்துத் தாருங்கள் என்று அழாத குறை­யாக முறை­யிட்டார். இதி­லி­ருந்து பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைச் சேர்ப்­ப­தி­லுள்ள குறை நிறை­களைப் புரிந்து கொள்ள முடி­கி­றது. எனவே  நடை­மு­றை­யி­லுள்ள சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணும்­படி கல்­வி­ய­மைச்சைப் பணித்­தி­ருக்­கிறேன். 

ஆசி­ரியர் தொழில் என்­பதை விட "ஆசி­ரியர் சேவை" என்ற பதமே மிகவும் பொருத்­த­மாகும். இந்தப் பணி­யி­லுள்ள  நெளிவு சுளி­வு­க­ளையும் நான் சிறு வய­தி­லி­ருந்தே நன்கு அறிந்­தி­ருக்­கிறேன். ஏனெனில் எனது தாய் ஆசி­ரியர் தொழிலில் ஈடு­பட்­டவர். களுத்­துறை, கம்­பஹா என்று நாட்டின் பல பாகங்­க­ளிலும் உள்ள பாட­சா­லை­களில் கற்­பித்­தி­ருக்­கிறார். தனது சொந்த பிர­தே­சத்­திற்கு இட­மாற்றம் கோராது தனது பொறுப்பை உரிய பாட­சா­லை­க­ளில் செய்தார். ஆசி­ரியப் பண்பு அப்­ப­டித்தான் இருக்க வேண்டும். அப்­போ­துதான் அவர்­களால் உரு­வாகும் பிள்­ளை­களும் நல்ல சீலர்­க­ளாக உயர்­வார்கள். 

நானும் எனது கிராமப் பாட­சா­லை­யி­லேயே பயின்றேன். எனது வீட்டில் மின்­சாரம் இல்லை. குப்பி விளக்­கொ­ளி­யி­லேயே  நான் பாடங்­களைப் படிப்பேன். அரைக்­காற்­சட்டை, செருப்­பு­டன்தான் பாட­சாலை செல்வேன்.  ஒரு­முறை எனது வகுப்பு மாண­வர்கள் புரிந்த கலாட்­டாவில் ஆசி­ரியர் என்­னைத்தான் குற்­ற­வா­ளி­யாகக் கண்டு கொண்டார். ஆனால் நான்  தவ­று­களில் ஈடு­ப­ட­வில்லை. என்­றாலும் என்னை அதிபர் அறைக்குக் கூட்டிச் சென்று பிரம்­பினால் அடித் தார். அதிபர் அறையில் சில நிமி­டங்கள் அடைத்து வைத்­தி­ருந்தார். ஆனால் அதனை நான் வீட்டில் வந்து முறை­யி­ட­வில்லை. அப்­படி முறையிட்­டாலும் ஆசி­ரியை என்ற வகையில் எனது தாய் என்­னைத்தான் மீண்டும் தண்­டிப்பார்.  இன்று நிலைமை எப்­படி?-ஆசி­ரியர் தண்­டித்­த­தற்­காக பொலிஸ் நிலையம், நீதி­மன்றம் என்­றெல்லாம் செல்­கி­றார்கள். ஆசி­ரியர் பிள்­ளை­களை நல்­வ­ழிப்­ப­டுத்­த­வேதான் தண்­டிக்­கவும் கண்­டிக்­கவும் செய்­கி­றார்கள். 

பிள்­ளைகள் பெரும்­பா­லான நேரங்கள் பெற்­றோ­ருடன்  தான் இருக்­கி­றார்கள். சில மணி நேரங்­களே ஆசி­ரியர் பொறுப்பில் இருக்­கி­றார்கள். அந்த சில மணி­நேர உழைப்­பி­லேயே நாட்­டுக்குத் தேவை­யான நல்ல பிர­ஜை­களை உரு­வாக்கித் தரும் பாரிய பணி அவர்­களால் நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது. இதற்கு அவர்கள் எவ்­வ­ளவோ அர்ப்­ப­ணிப்புச் செய்­கி­றார்கள். நாடு வேண்டி நிற்கும் சமூ­க­மாற்­றத்தை மாணவர் மனதில் விதைக்கச் செய்யும் பணியைஆசி­ரி­யர்­களால் தான் நிறை­வேற்ற முடி­யு­மா­கி­றது. 

அரசின் கொள்­கை­களைச் செயற்­ப­டுத்த அர­சி­யல்­வா­தி­களால் இய­லாது. அதற்­காக ஒவ்­வொரு துறை­க­ளிலும் கல்­வி­பெறும் மாண­வர்­க­ளால்தான் அரசின் திட்­டங்கள் அமு­லாக்கம் பெறு­கின்றன. அதனால் தான் இந்­நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு எமது அரசு முன்­னு­ரிமை கொடுத்து செயற்­ப­டு­கி­றது. 

நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் சென்­றி­ருக்­கிறேன். அப்­ப­டி­யொரு சந்­தர்ப்­பத்தில் வவு­னி­யாவில் பாட­சா­லை­யொன்றில் க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய 35 மாண­வர்­களும் சித்­தி­ய­டை­ய­வில்லை என்றும் அதற்கு ஆசி­ரியர் பௌதிக­வள குறை­பா­டு­களே காரணம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­பட்­டது. 

பின்­தங்­கிய பகு­தி­க­ளுக்கு வளங்கள் வந்­த­டை­வ­தில்லை என்ற குறையும்
நில­வி­வ­ரு­கி­றது. எனவே எமது ஆட்சிக் காலத்தில் வளங்கள் சம­மாக நாட்டின் நாலா பகு­தி­க­ளையும் சென்­ற­டைய வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கிறேன். ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் பௌதிக வளங்கள், ஆளணி வளங்கள் சம நிலையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்று கல்வி அமைச்சைப் பணித்­தி­ருக்­கிறேன். 

ஆசி­ரியர் தினத்தில் ஆசி­ரி­யர்கள் எல்­லோரும்  கௌர­விக்­கப்­பட வேண்டும். பெற்றோர் 3–4 பிள்­ளை­க­ளைத்தான் பரா­ம­ரிக்­கின்­றனர். ஆனால் ஆசி­ரி­யர்கள் 40 –50 பிள்­ளை­களை அதுவும் அதிபர் ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்கும் பாரிய பொறுப்பில் இருக்கிறார்கள்.   எனவே இத்தினத்தில் எனது மேலான வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவிக்கிறேன். நாட்டின் சுதந்திரம், மேலான ஜன நாயகத்தை நாம் அனைவரும் நல்ல முறையில் அனுப விக்க நற்பிரஜைகளை உருவாக்கித் தரும் ஆசிரிய சமூகம் வாழ வாழ்த்துகிறேன் என்­றார்.
Disqus Comments