வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) அமைப்பினால், பொலிஸ் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள, அவ்வமைப்பின் தலைவர் அகுலுகல்லே சிறி ஜினானந்த தேரர் கூறியுள்ளதாவது, “தெற்கிலுள்ள மக்களைச் சீண்டும் வகையிலும் பயங்கரவாதத்துக்குப் பாதையமைக்கும் வகையிலுமே, வடக்கு முதலமைச்சரின் அண்மைக்காலக் கருத்து கள் அமைந்திருந்தன.
இதற்கு எதிராக, எமது அமைப்பைப் போன்று பல அமைப்புக்களும், தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன. எமது எதிர்ப்பை, ஆர்ப்பாட்டமொன்றாகக் காட்டுவதில் மாத்திரம் பயனில்லை. வடக்கு முதலமைச்சரைப் போன்று, வேறு மாகாணத்தைச் சேர்ந்த முதலமைச்சரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ செயற்படக்கூடாது என்பதில், எமது சிங்கள ஜாதிக பெரமுன, உறுதியாக இருக்கின்றது.
அதனால், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட வடக்கு முதலமைச்சருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால், அவருக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளோம்” என, தேரர் மேலும் தெரிவித்தார்.