எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை 100க்கு 5 வீதமாக உயர்த்த அனுமதி பெற்றுத்தருமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம் தொடர்ந்தும் அமுலில் இருந்தால், நட்டத்தை சந்திக்க நேரிடும் என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், மின் கட்டணம் அதிகரிக்கப்படாது என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.