கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கண்டியிலுள்ள பிரபல பாடசாலைகள் மூன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை சீருடையுடன் தெல்தெனிய, ஒருதொட்ட, பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த போது தெல்தெனிய பொலிஸாரால் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒருவருக்கு 25,000 ரூபாவான சரீரப் பிணை வழங்கப்பட்டு சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் கண்டி, மெணிஹின்ன மற்றும் கென்கல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
(அத தெரண தமிழ்)