மலேசியாவில் பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவியை, துாணில் சங்கிலியால் கட்டி வைத்து பூட்டு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 8 வயது மாணவியை, கார் பார்க்கிங்கில் உள்ள துாணில் சங்கிலியால் கட்டி, பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளார் அவரது தாய். பாடசாலை சீருடை அணிந்த அந்த சிறுமி, ஸ்கூல் பேக், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன் அழுதபடி நின்றிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் குழந்தையிடம் விசாரணை நடத்தியதில் ''நான் பாடசாலைக்குஒழுங்காக செல்லாததால், தாய் இப்படி தண்டனை அளித்துள்ளார். 10 நிமிடத்தில் வந்து விடுவார்,'' என கூறினாள். சிறிது நேரத்தில் காரில் வந்த தாய், பூட்டை திறந்து சிறுமியை விடுவித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், ''எனது குழந்தை ஒழுங்காக பாடசாலைக்கு செல்வதில்லை.
இதனால் அவளுக்கு தண்டனை அளிக்கும் விதமாக இப்படி செய்தேன்,'' என தாய் கூறினார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று