Saturday, October 1, 2016

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார்.
தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணனி மயப்படுத்தும் பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், 350700 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
நாடு முழுவதும் 2959 நிலையங்களில் பரீட்சை இடம்பெற்றது.
Disqus Comments