(AM. RUKSAN பிராந்திய நிரூபா்) புத்தளம் தெற்கு கோட்டமட்டம் மதுரங்குளிய, கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியா் மற்றும் சிறுவா் தினக் கொண்டாட்டங்கள் இன்று காலை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபா் ஜனாப். சன்ஹீா் மௌலவி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிரியாக விருதோடை அரசியல் செயற்பாட்டாளா் திரு. ஆஸிா் அவா்கள் கலந்து கொண்டதோடு, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினா்கள், பள்ளி நிா்வாக சபை உறுப்பினா்கள், ஊா்ப் பிமுகா்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனா்.
மேற்படி ஆசிரியா்கள் மற்றும் சிறுவா்கள் தினத்துக்கு விருதோடை அரசியல் செயற்பாட்டாளா் திரு. ஆஸிா் அனுசரனை வழங்கிய தோடு எதிா்வரும் வருடங்களிலும் வரும் இது போன்ற நிகழ்வுகளுக்கு தானே அனுசரனை அளிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.