Thursday, October 6, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக போர்த்துக்கல் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவு

போர்த்துக்கல் நாட்டு முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
15 நாடுகளை அங்கமாகக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின், பொதுச்செயலர் பதவிக்கு அதிகாரப்பூர்வமில்லாத வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
போர்ச்சுக்கல் நாட்டு முன்னாள் பிரதமர் குட்டெரெஸ், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டாலினா ஜோர்ஜிவா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதில் ஆரம்பம் முதலே குட்டெரெஸ்க்கு ஆதரவு அதிகரித்து வந்தது. இந்நிலையில், 6-ஆவது முறையாக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமில்லாத வாக்கெடுப்பிலும் குட்டெரெஸ்க்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்தன.
எந்தக் கருத்தும் தெரிவிக்காதோர் பிரிவில் 2 வாக்குகள் பதிவாகின. எதிராக வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
இதையடுத்து, நியூயோர்க்கில் அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பு இன்று காலை நடத்தப்பட்டது. இதில், குட்டெரெஸ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர் தற்போது ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பின் தலைவராக உள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் ஐ.நா. பொதுச்செயலராக பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.
Disqus Comments