Thursday, October 20, 2016

குவைத்தில் மதுபான உற்பத்தி நிலையம் நடாத்திய வந்த இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்


சட்டவிரோதமாக குவைத் நாட்டில் மதுபான தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கைப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

பைஹா என்ற பகுதியில் வைத்து குறித்த பெண் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் இதன்போது 400 மதுபான போத்தல்கள், 10 பெரல்கள் உள்ளிட்ட மதுபான தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண்ணுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Disqus Comments