Friday, October 7, 2016

ஆசிரியப்பணியை மாத்திரம் அரசியல்வாதிக்கு முதுகு சொறிகிற பணியாக மாற்றிவிடாதீர்கள்!

(Mujeeb Ibrahimஆசிரியர் தினமாகிய இன்று கட்டாயம் சொல்லியாகவேண்டிய செய்தி அல்லது வேண்டுகோள்......
இலங்கையில் அரசியல் செய்கிற பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தங்களுக்கு வேண்டப்பட்ட அரச ஊழியர்களை அவர்களது உரிய பணியிலிருந்து விடுவித்து (ரிலீஸ்) தங்களது அரச பணிக்கென அமர்த்துவதற்கான ஏற்பாடொன்று இருக்கிறது.
இவ்வாறான ஊழியர்களுக்கு வழமையான அரச ஊதியம் வரும், ஆனால் அவர்கள் அரச பணியொன்றும் ஆற்றுவது கிடையாது. அவ்வப்போது அரசியல்வாதியின் ஆர்டர்களுக்கு தலையை மாத்திரம் ஆட்டிக்கொண்டால் போதுமானது!
சுருங்கச்சொன்னால் ரிலீஸ் என்பது அரசியல் முதலாளியின் அனுக்கிரகத்தால் வீட்டில் 'சும்மா' உட்கார்ந்து சாப்பிடுவதாகும்.
இந்த கெடகரியில் அரச திணைக்களங்களங்களில், நிறுவனங்களில், பாடசாலைகளில் பணியாற்றுகிற பலர் 'சும்மா' உட்கார்ந்து சோறு திண்பவர்களாக இருக்கிறார்கள்.
இதிலும் ஆக வேஸ்ட கெடகரி யாரென்றால் அரசியல்வாதியின் அனுசரணையில் ரிலீஸ் பெற்ற ஆசிரியர்கள் ஆகும்.
இவர்கள் சீரியசான அரச பணியொன்றை எங்காவது ஆற்றினால் மனம் ஆறிப்போகும்.
ஆனால் துரதிஷ்டம் 99% ஆனவர்கள் சும்மா இருந்து சோறு திண்ணுகிற பார்டிகள்தான்.
ஒரு எம்.பி மாறி மறு எம். பி தாவி இந்த ரிலீஸ் சுகத்தை அனுபவித்த / அனுபவித்து கொண்டிருக்கிற சில ஆசிரியர்களை நான் அறிவேன்.
நீங்களும் உங்கள் பிரதேசங்களில் தெரிந்துவைத்திருக்கலாம்.
இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஏனைய அரச துறைகளில் சேவையாற்றும் ஊழியர்கள் இவ்வாறு ரிலீஸ் எடுத்து எக்கேடு கெட்டாவது போகட்டும், ஆனால் ஆசிரியப்பணியின் புனிதத்துவம் காக்கவேண்டியவர்களும் இவ்வாறு செயற்படுவது வருத்தமளிக்கிறது.
பாடசாலை நடுவே சந்தைக்கு போவது, சொந்த வேலைகளுக்காக பாய்ந்து போவது போன்ற பாரம்பரிய நடைமுறைகள் அருகி இந்த நவீன ரிலீஸ் நோய் பலரையும் தொற்றியிருக்கிறது.
ஆகவே ஆசிரியர் தினத்தின் பெயரால் ....
அர்ப்பணிப்பு மிகு ஆசிரியர்களின் பெயரால்....
உங்களை நம்பி கண்ணியத்தோடு காத்திருக்கும்
மாணவர்களின் பெயரால் கேட்கிறேன்...

தயவு செய்து ஆசிரியப்பணியை மாத்திரம் அரசியல்வாதிக்கு முதுகு சொறிகிற பணியாக மாற்றிவிடாதீர்கள்!
அது பெரும்பாவமாகும், உங்கள் பரம்பரையையும் தாக்கும் பாரதூரம் நிறைந்ததாகும்!
சோக்கை தூக்கி சோறு திண்ணுகிற தன்மானமும்
சோம்பேறியாய் சோறு திண்ணுகிற ரிலீசும் சமமாகுமா?

ஆசிரியர்களை அரசியலுக்காய் ரிலீஸ் பண்ணுகிற எம்பி மாரும், அதன் பின்னே சும்மா இருந்து சம்பளம் எடுக்க சம்மதிக்கும் குருமாரும் கண்திறப்பார்களா?
நாம் இந்த நாளில் பரப்பக்கூடிய ஆசிரியர்தின செய்தியாக இது இருந்தால் யாராவது கண் திறக்க கூடும்!
Disqus Comments