Saturday, November 12, 2016

வட மாகாண பட்டதாரி ஆசிரியா் நியமனம் - விண்ணப்ப முடிவுத்திகதி நவம்பா் 18 வரை நீடிக்கப்பட்டள்ளது

வட மாகாணத்தில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடத்தப்படும் போட்டிப்பரீட்சையில் தோற்றுவதற்கான வயதெல்லை 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அறிவித்துள்ளார்.
வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவை தரம் மூன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்கப்பட வேண்டிய திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற்கொண்டு வட மாகாண பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Disqus Comments