அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்று உறுப்பினரும், ஜம்மியத்துல் உலமா சபை-கொழும்பு நகரின் தலைவருமான அஷெய்க் யூஸுப் ஹனிபா முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது.
“சமூக எழுச்சியில் குடும்பங்களின் பங்களிப்பு” எனும் கருப்பொருளில், அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மஹ்மூத் இஸ்லாமிய கலாசார மையம் (பனார்) கேட்போர் கூடத்தில் தமிழ் மொழியில் நாளை (03-11-2016) நடைபெறவுள்ள இவ்விஷேட சொற்பொழிவுக்கு இலங்கையர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் சிறிலங்கா மஜ்லிஸ் கத்தார் (SLMQ) ஏற்பாட்டு குழுவினர்.
அதேநேரம் ஷனய்யா அல்-அத்தியாஹ் மஸ்ஜிதில் “அழகிய வார்த்தைகளும் தர்மமே” எனும் கருப்பொருளில் நாளை மறுநாள் (04-11-2016) இரவு 7.30 மணி தொடக்கம் தமிழ் மொழியில் நடைபெறவுள்ள இச்சொற்பொழிவு தொடர்பாக மேலதிக தகவல்கள் அறிய அஹ்மத் ரிலா 6673 7718, ரீஸா முஹம்மது 5549 7421 எனும் தொலைபேசி இலக்கங்களை அழைக்கலாம்.