புத்தளம் செய்னப் பாடசாலையில் தரம் 4ல் கல்வி கற்கும் பாத்திமா நதீஸா(வயது 9)கடந்த ஞாயிற்றுக்கிழமை(06.11.2011)தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு தனது குடும்ப அங்கத்தவர்களுடன் சென்றிருக்கிறாள்.
உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த பாத்திமா நதீஸா எதேச்சையாக குறித்த வீட்டுக்கு அருகாமையில் இருக்கு ரயில் பாதைக்கு சென்றிருக்கிறாள்.அந்த சமயம் பார்ந்து ரயில் வண்டியும் வேகமாக வந்துக்கொண்டிருந்ததாம்.
ரயில் வண்டி பாத்திமா நதீஸாவின் மிக அண்மையில் நெருங்கிய உடனே அதை அறிந்து கொண்ட பாதிமா நதீஸா எந்த வித தடுமாற்றமும் இன்றி ரயில் பாதையின் நடுவே படுத்திருக்கின்றாள்.
ரயில் பாத்திமா நதீஸாவை தாண்டி சென்ற பிறகுத்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கின்றாள்.
பாத்திமா நதீஸாவை நான் நேரடியாக சென்று குறித்த சம்பவம் சம்பந்தமாக வினவிய பொழுது....
"நான் ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த பொழுது பாரிய சத்தம் ஒன்றை கேட்டு திரும்பி பார்த்தேன் ரயில் வண்டி என்னை மிகவும் அண்மித்து விட்டது இறைவன் என்னை காப்பற்றுவான் என்ற நம்பிக்கையுடன் ரயில் பாதையின் இரண்டு தண்டவாளங்களுக்கும் நடுவே படுத்துக்கொண்டேன்.
ரயில் வண்டி என்னை தாண்டி சென்ற பிறகே எழுந்து வீடு சென்று குறித்த விடயத்தை கூறினேன். எல்லோரும் வியப்படைந்தார்கள் மேலும் இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.
எனது பெற்றோர்கள் எனக்கு தந்த மணவுறுதியும் இறைவனின் நாட்டமுமே என்னை இந்த கோடூர விபத்திலிருந்து பாதுகாத்தது"
என்று அந்த தைரியமிக்க சின்னஞ்சிறுமி இவ்வாறு பதிலளித்தாள்.
மேலும் நேற்று பாத்திமா நதீஸாவை முன்னால் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் சந்தித்து தனது ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(HAMEETH USHAMA)


