கட்டாரில் இன்று (06-11-2016) அதிகாலை கடுமையான மூடுபனி பொழிந்தது. திரை போல சாலையை மூடி இருந்த பனி மூட்டத்துக்கிடையே வாகனங்களை ஓட்ட சாரதிகள் சிரமப்பட்டதையும், அனைத்து வாகனங்களும் விளக்குகளை எாிய வைத்த நிலையில் பயணித்ததையும் அவதாகிக்க முடிந்தது.
டோஹா, ரய்யான், சல்வா வீதி போன்ற சாலையிலும் மூடுபனி கம்பளிப் போர்வை போன்று இருந்ததாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய மூடுபனி அறிகுறி இனிவரும் காலங்களில் குளிா் காலம் ஆரம்பமாகப் போகின்றது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.








