அண்மைக்காலமாக கத்தாரினை தெரிவு செய்து இங்கு அல்லல்படும் மக்களுக்கு நிவாரனம் பெற்றுத்தருவதாகவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் வரும் அரசியல் வாதிகளே!
சாதரண பமரணின் இடத்திலிருந்து உங்களிடம் நான் கோரும் எந்த பிரச்சினைகளையாவது தீர்க்க முடியுமா?
01 நான் 12 மணி நேரம் வேலை செய்கின்றேன் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை அதற்கு உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? ( குறைந்தது எனது கம்பேனி ஓனருடன் வேண்டாம் என்னுடைய நிருவாகத்தில் உள்ள HR மேனேஜேரிடம் பேசமுடியுமா?)
02. என்னுடைய ரூமில் சுமார் 6 பேர் தங்குகின்றனர் அதுவும் டபள் பெட் இந்த டப்ள் பெட்டை சிங்கிளாக ஆக்கி 3 பேராக மாற்றித்தரமுடியுமா?
03. எப்போதும் குடும்பத்திற்காகவும் நாட்டின் வருமானத்திற்காகவும் வாழும் எங்களுடைய தேவைகளில் ஒன்றான பல சகோதரிகளை கொண்ட எங்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டித்தர முடியுமா?
04. வாழ்க்கையை இங்கு சீரழித்து விட்டும் வரும் எங்களுக்கு குறைந்தது ஓய்வூதியத்திட்டத்தை பெற்றுதரமுடியுமா?
05. நாட்டின் வருமானத்தில் பங்களிக்கும் எங்களது பிள்ளைகளுக்கு பாடசாலைகளிலே தரமான கல்வியினை பெற்றுத்தரமுடியுமா?
உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது நாங்கள் அவதானிக்கின்ற விடயம் ஆக நாட்டிலிருந்து குடும்பத்தை பிரிந்து வெயிலோடு வேலை செய்யும் எங்களை கம்பேனியும் இரத்தத்தை வியர்வை ஆக்கி குடிக்கின்றது, இந்த இறந்த உடலில் இனியும் நம்புவதற்கும் ஏமாந்து போவதற்கும் எதுவும் இல்லை இனிமேலும் எங்களை ஏமாற்ற வேண்டாம்.
உங்களால் முடிந்தால் வாக்களித்த மக்களுக்கு நல்லதை செய்யுங்கள்.
- மக்சூத் ரம்ஸான்.. கத்தாரில் இருந்து.
