(Safwan Basheer) எமது உரிமைக்காக நாம் போராட வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் எமது மதம்சார்நத சகல விடயங்களையும்
பின்பற்றுவதற்கு முழு உரிமையும் சுதந்திரமும் இருக்கின்றது.
இந்த அடிப்படையில் ஒரு உரிமை போராட்டமாக நோக்கும் பொழுது தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டம் நியாயமானதே.
ஆனால் நமது போராட்டத்தின் நோக்கம் திரிவுபடுத்தப்படாமல் இருப்பதற்கும், போராட்டத்தின்போது எமது வார்த்தைப்பிரயோகங்கள் எமது நோக்கத்தை சிதைத்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ளவும் தவ்ஹீத் ஜமாத்
தெரிந்து கொள்ள வேண்டும்.
இளவயது திருமணத்துக்கு அனுமதி கோரியும் ஷரீயா சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தவுமே
இந்த போராட்டம் என்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அல்லது இனவாதிகள் வேண்டுமென்றே அவ்வாறுதான் புரிய வைத்திருக்கிறார்கள்
இளவயது திருமணம் என்பது "சிறுவர் துஷ்ப்ரயோகம்" என்றும் "ஷரியா சட்டம்"
என்பது கழுத்தையும், கையையும்
வெட்டும் ஒரு மூர்க்கத்தனமான சட்டம்
என்றுதான் சிங்களவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அடுத்து GSP Plus என்பது நாட்டுக்கு கிடைக்கும் ஒரு சலுகை அதை தடுக்க இந்த முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்கள் என்ற கருத்தையும் சில இனவாத சிங்கள ஊடகங்கள் பொதுமைப்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்த இடத்தில் இருந்துதான் ஒரு சாதாரண சிங்கள குடிமகன் இந்த ஆர்ப்பட்டத்தை நோக்குகிறான் என்பதைப் புரிந்து கொண்டுதான் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் வரும்
விரமர்சணங்களை நாம் அணுகவேணடும்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஏதாவது நண்மை கிடைக்கும் என்றால் அது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் கிடைக்கும் என்பதைப் போலவே ஏற்படும் பாதிப்புக்களையும் முழு சமூகமும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.
ஞானசார சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இல்லாத ஒருவராக
இருந்தாலும், அவரை ஒரு முஸ்லிம் பொது இடத்தில் தூற்றுவதை எந்த சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
எனவே தவ்ஹீத் ஜமாத் "முஸ்லிம் ஜனசமாஜய" என்ற சிங்கள சொல்லை அடிக்கடி உச்சரித்துக்கொண்டு தமது போராட்டங்களை நடத்தும் பொழுது
மார்க்கத்துக்குள் நடக்கும் விவாதங்களில்
போல் அல்லாமல் கொஞ்சம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
உணவு சமைக்க மட்டும் தெறிந்தால் போதாது அழகாக பரிமாறவும் தெறிந்திருக்க வேண்டும்.
