Thursday, December 15, 2016

விருதோடையில் கரப்பந்து மைதானம் திறப்பு விழாவும் மாபெரும் கரப்பபந்தாட்டப் போட்டியும்

விருதோடையில் கரப்பந்து மைதானம் திறப்பு விழாவும் மாபெரும் கரப்பபந்தாட்டப் போட்டியும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாண சபை உறுப்பினா் S.H.M. நியாஸ் அவா்களும், அதிதிகளாக முன்னால் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினா் முஸம்மில் அவா்களும், அத்துடன் விருதோடை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளம் சகோரதா் அஸாம் அவா்களும், இன்னும் வெள்ளைப்புறா விளையாட்டுக்கு கழக உறுப்பினா்கள் உட்பட இன்னும் ஊா் முக்கியஸ்களும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள். 

நாளை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ள கரப்பந்தாட்ட மைதானத்துக்கான 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டை விளையாட்டு துறைப்பிரதியமைச்சா், ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறைப்பாராளுமன்ற உறுப்பினா் ஹரீஸ் அவா்கள் மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments