Saturday, January 28, 2017

இலங்கையில் தினமும் 1000 கருக்கலைப்புக்கள், 400 விவாக ரத்துக்கள், 58% காதல் திருமணங்கள் தோல்வியில்!

(Inamullah Masihudeenஇளவயது திருமணங்கள் ஊக்குவிக்கப் படல் வேண்டும், பெரிதும் பேசப்படாத சீர்கேடுகள் அதிகரித்துச் செல்கின்றன.
மிகவும் பொறுப்பான திருமண வாழ்வு மற்றும் குடும்ப நிறுவனம் குறித்த வழிகாட்டல்கள் உரிய காலத்தில் வழங்கப்படுதல் கட்டாயமாகும்.
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை கட்டுக் கோப்புக்களை தகர்த்தெறிகின்ற இரவல் சமுக பொருளாதார கலை கலாசார வாழ்வொழுங்கு உம்மத்தை அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது.

நவீன தொலைத் தொடர்பு சாதானங்கள், இன்டர்நெட் பாவனை, சமூக வலை தளங்கள் சகலவிதமான ஒழுக்கவியல் வரம்புகளையும் சிதைத்து விடுகின்றன.
இலங்கையில் தினமும் சுமார் 1000 கருக் களைப்புக்கள் இடம் பெறுகின்றன, 400 விவாக ரத்து இடம்பெறுகிறது, சுமார் 58% காதல் திருமணங்கள் முறிவடைகின்றன. குடும்ப வன்முறைகள் அதிகரித்துச் செலகின்றன.
தாமதித்த திருமணங்கள் முறை கேடான எதிர்பால் உறவை மாத்திரமன்றி ஒருபால் உறவையும் ஊக்கு விக்கின்றன, சிறுமிகள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் அதிகரித்துச் செல்கின்றது.
சிறார்களின், பதின்ம வயதினரின் பாலியல் ஆளுமைகள் சிதைக்ககப் படுகின்றன.
முறை கேடான பாலுறவு கொடிய நோய்களுக்கு இட்டுச் செல்கின்றன, பாதுகாப்பான பாலுறவு என்ற பெயரில் முறைகேடான உறவுகள் ஊக்குவிக்கப் படுகின்றன, ஒரினசேர்க்கையாளர் அங்கீகாரம் கேட்டு நிற்கின்றனர்.
கற்பு நெறியும் கட்டுக் கோப்பும் மகளிருக்கு மட்டும் உரியதல்ல.
உயரிய இஸ்லாமிய தனிநபர் ஆளுமை, குடும்ப நிறுவனம் இரண்டும் சிதைக்கப் படுகின்ற பொழுது இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு ஆட்சிக் கட்டமைப்பு பற்றியெல்லாம் கனவு காண்பதில் அரத்தம் இல்லை.
தொடரும்...
குறிப்பு: (இளவயது என்றால் 18 ற்கு கீழ் என்று சொல்ல வில்லை, உ-ம் ஆண்ககள் 25 ற்கு முதல், பெண்கள் 20 ற்குள்)
Disqus Comments