ஆறு உணவுப்பொருட்களுக்கு அரசாங்கத்தினால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஒரு கிலோகிராம் மைசூர் பருப்பின் அதிகபட்ச சில்லறை விலை 159 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் பயறு 205 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நெத்தலி 405 ரூபாவாகவும், தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நெந்தலி 490 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 93 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு ஒரு கிலோகிராம் 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எந்தவொரு உற்பத்தியாளரும், இறக்குமதியாளரும், விநியோகஸ்தரும், வர்த்தகரும் குறித்த பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
