Sunday, January 29, 2017

எச்சரிக்கைப் பதிவு முகநூல் தொடர்பால் யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்! குருநாகலையில் சம்பவம்!

முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அந்த தொடர்புகளால் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குருணாகல் - சந்தலங்காவ என்ற பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுடன் முகநூலூடாக நண்பர்களாகி பின்னர் காதல் வயப்பட்டுள்ளனர்.
முகநூலில் அறிமுகமான இவர்கள் இருவரும் பல முறை சந்தித்துள்ளனர்.
இதேவேளை இளைஞனினால் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார்.
மேலும் இளைஞனிடமிருந்து ஒதுங்கி செல்ல நினைத்த யுவதிக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளதுடன், தன்னுடன் வறுமாறும் அழைத்துள்ளார்.
இவ்விடயம் யுவதியின் வீட்டாருக்கு தெரியவரவே குறித்த இளைஞனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை குறித்த இளைஞன் எற்கனவே திருமணமானவர் எனவும் கூறப்படுகின்றது.
குறிப்பு -
நன்மையான விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டிய முகப்புத்தகத்தினை இன்றைய இளம் சமுதாயத்தினர் அதிகமாக தீமையான விடயங்களுக்கே பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இதன் மூலம் பெண்கள் எடுக்கும் தவறான நடவடிக்கைகள் அவர்களின் வாழ்க்கையையே சீரழித்து விடுகின்றது.
எனவே இனிவரும் நாட்களில் பெண்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Disqus Comments