வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபரிடம் இருந்து போலியான ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
