
அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்க போவதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் வைத்து தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன்ரத்ன பிரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பள உயர்வானது ஊழியர்களின் தொழில் தரத்தை மையமாக கொண்டே அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
இரண்டாயிரம் ரூபா தொடக்கம் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலதிக நேர வேலை சம்பளம் மற்றும் கடன் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு இந்த ஆண்டு அரச சேவையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.