கற்பிட்டி பிரதேசத்தில் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 16 பேர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்களில் கற்பிட்டி பள்ளிவாசல் துறையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் 11 பேரும் அமெரிக்க இளைஞர் ஒருவரும் அடங்குவர்.
இவர்கள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்திய வீடியோ கமரா உள்ளிட்ட சில உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்திற்கான இயக்குனர் புறக்கோட்டையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதியின்றி படப்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் இவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.