சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக சுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் அங்கிருக்கின்ற இலங்கையர்களுகளை நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பிலான சவுதி அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பில் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தூதுவராலயம் தெரிவிக்கின்றது.
ஜித்தாவில் மாத்திரம் ஆறாயிரம் இலங்கையர்கள் இருப்பதாக ஜித்தா தூதரகத்தின் முதன்மை செயலாளர் எம்.பீ.சரூக் குறிப்பிட்டுள்ளார்.
சட்விரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களில் இரண்டாயிரம் பேர் நாடு திரும்புவதாக தமது அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சு ஆலோசகர் அநுர முத்துமால தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சவுதி அரேபியாவில் சுமார் ஆறாயிரம் இலங்கையர்கள் மாத்திரமே சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.