கல்வி பொதுத்தராதர உயர்தரத்தின் எந்தவொரு பாடத்தையும் நீக்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.உயர்தரப் பிரிவுக்காக பல்வேறு தொழில்நுட்ப பாடத்திட்டங்கள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடங்களை நீக்குவதை விட கல்வித்துறைக்குப் பொருந்தகூடிய புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப பாடங்களின் கீழ், பொறியியற் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானம் ஆகிய புதிய பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.