
பங்களாதேஷின் டாக்கா நகரில் கடந்த 17 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற எட்டு மாடிக் கட்டிடமொன்று இடிந்து விழுந்த போது அதில் சிக்கி வெளியேற முடியாமல் இருந்த பெண்ணொருவம் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி கட்டிடத்தின் இரண்டாம் மாடியிலுள்ள இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்த மீட்புப் பணியாளர்கள் இந்த பெண்ணைக் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இடிந்து வீழ்ந்துள்ள இந்த 8 மாடிக் கட்டிடம் ஆடைத் தொழிற்சாலை, வங்கி மற்றும் பல கடைகளையும் கொண்டமைந்துள்ளன.
பங்களாதேஷில் பல மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள் ஒழுங்கு விதிமுறைகளை மீறி கட்டப்படுவதினால் இவ்வாறான கட்டிட இடிபாடுகள் இடம்பெறுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)