Friday, May 10, 2013

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக செல்ல கட்டாயமாக 25 வயது பூர்த்தியடைய வேண்டும்

பணிப்பெண்களாக வெளிநாட்டிற்குச் செல்லும் இலங்கையர்களின் வயதெல்லை தொடர்பான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த சட்டம் அமுலாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

இதன்படி சவுதி அரேபியாவிற்குச் செல்லும் பணிப்பெண் ஒருவருக்கு கட்டாயமாக 25 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சவுதி அரேபியா தவிர்ந்த ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்களுக்கு கட்டாயமாக 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்பதோடு ஏனைய நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்களுக்கு 21 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாடுகளுக்குச் செல்லும் பணியாட்கள் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழைக் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மங்கள ரந்தெனிய கூறினார்.
Disqus Comments