அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலியானதுடன் 13 பேர் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாடிக் கட்டடம் ஒன்றே இடிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டடத் தொகுதியில் குடியிருப்புக்களும் சில வர்த்தக நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கட்டடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராதபோதிலும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.