Saturday, July 20, 2013

23.07.2013 அன்று புழுதிவயல் கிராம சேவகா் பிரிவில் நடமாடும் சேவை

(MRM. AMEEN - GS) தேசத்திற்கு மகுடம் 2014ம் ஆண்டு  குளியாப்பிட்டியில் நடைபெறவுள்ள கண்காட்சியை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த அடிப்படையில் கிராமங்களில் வாழும் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவா்த்தி செய்து கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவை சகல கிராமங்களில் இடம் பெற்று வருகின்றன. 

அந்த வகையில் முந்தல் பிரதேச செயலாளா் பிரிவுக்குட்பட்ட கிராம சேவகா் பிரிவுகளிலும் இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  மக்களின் தேவைகளை அறிந்து நிவா்த்தி செய்து கொடுக்கும் வகையில் முந்தல் பிரதேச செயலாளா் பிரிவின் 9 கிராம சேவகா் பிரிவுகளில் நடமாடும் சேவை இடம் பெற்றுள்ளது. 

அந்த வரிசையில்  புழுதிவயல் கிராம சேவகா் பிரிவுக்கான நடமாடும் சேவை (10வது) எதிர்வரும் 23.07.2013 அன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை புழுதிவயல் பாடசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நடமாடும் சேவையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீா்வுகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அரைகுறை வீடுகளுக்கு உதவி செய்தல்
  • மலசலகூடம்
  • குடிநீா் வசதி ஏற்படுத்தில் கொடுத்தல்
  • கூரைத் தகடு வழங்குமதல்
  • ஒடு வழங்குதல்
  • மின்சார வசதி 
  • பிறப்புச் சான்றிதழ்
  • அடையாள அட்டை இல்லாதவா்களுக்கு பெற்றுக் கொடுத்தல்
போன்றவற்றோடு வைத்திய சிகிச்சைகளும், இளைஞா்களுக்கான தொழில்பயிற்சிக்கான வழிகாட்டுதல்களும்,  சுயதொழிலுக்கான கடன் உதவிகள் என்பன இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன. 
எனவே உங்கள் தேவைகளை செய்து தர உங்கள் காலடியிலேயே இடம் பெறவுள்ள அந்த அரிய சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
Disqus Comments