Saturday, July 27, 2013

ஜாகிர் நாயக் யிற்கு 'சிறந்த இஸ்லாமிய ஆளுமை விருது' வழங்குகிறது துபாய்

(INRM) : துபாய் அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது இந்தியாவை சார்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சாரகர் ஜாகிர் நாயக்குக்கு வழங்கப்பட உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசு ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் அவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை கடந்த 17 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது.
இவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் வேந்தர் அஹமது அல் தைய்யிப் என்பவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எகிப்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல்களால் தம்மால் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க இயலாது என்று தைய்யிப் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் குரானை உலகெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவை சார்ந்த மருத்துவர் ஜாகிர் நாயக்குக்கு இவ்விருது வழங்கப்படுவதாக துபாய் சர்வதேச புனித குரான் குழு அறிவித்துள்ளது.
மும்பையில் செயல்படும் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் தலைவரான ஜாகிர் நாயக் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்பவர் என்பதும் அவர் தன் உரைகளில் பல்வேறு மத கிரந்தங்களை மேற்கோள் காட்டி பேசுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பீஸ் எனும் பெயர் கொண்ட தொலைக்காட்சி ஓடை இவரது கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றது.
Disqus Comments