Sunday, September 22, 2013

யாழ்ப்பாணத்தில் விருப்பு வாக்கு பெற்றவர்கள் விபரம் - விக்னேஸ்வரனுக்கு 132,255 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும் தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பாலச்சந்திரன் கஜதீபன் 29,669 விருப்பு வாக்குகள்
இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகள்
கந்தையா சிவஞானம் 26,747 விருப்பு வாக்குகள்
எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகள்
ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகள்
எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகள்
கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகள்
விந்தன் கனகரத்தினம் 16,463  விருப்பு வாக்குகள்
ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகள்
கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகள்
வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகள் பெற்றுள்ளனர்.'

இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும், அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Disqus Comments