Friday, September 6, 2013

உழ்ஹிய்யாவை பாதுகாப்பாக நிறைவேற்ற பொறிமுறை: பௌஸி

உழ்ஹிய்யா கடமையை முஸ்லிம்கள் எதவித தடைகளும் சவால்களும் இன்றி பாதுகாப்பாக நிறைவேற்றுவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பொறிமுறையொன்றினைத் தயாரிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

உழ்ஹிய்யா கடமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் குழுக்களால் எதுவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படாதவாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியிடம் உறுதி பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலம் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி இந்த அரசாங்கம் மாடு அறுப்பதை தடை செய்யும், மாடு அறுக்க விடமாட்டார்கள். இதனால் உழ்ஹிய்யா கடமைக்கு பிரச்சினைகள் ஏற்படும என்று பிரசாரம் செய்து வருகிறது. தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறான பிரசாரங்கள் குறித்து முஸ்லிம்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மார்க்க கடமையான உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்கு எவ்வித தடைகளும் இந்த அரசினால் ஏற்படுத்தப்படமாட்டாது என்றார்.
Disqus Comments