Friday, September 13, 2013

நாளை மதுரங்குளி வருகின்றார் பஷில் ராஜபக்ஷ

தயட கிருள - தேசத்திற்கு மகுடம் - 2014 முன்னிட்டு நடைபெறவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களைப் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ நாளை 14.09.2014ம் திகதி மாலை 3.00 மணிக்கு மதுரங்குளி நகருக்கு வருகை தரவுள்ளார். அவருடன் முக்கிய அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், இம்முறை வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வுகள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கற்பிட்டி தொகுதி அமைப்பாருமான விக்டர் அன்டனி பெரேரா அவர்களின்  தலைமையில் நடைபெறவிருக்கின்றன.

இந்நிகழ்வில் மதுரங்குளி - தொடுவா பாதைக்கு காபட் இடும் வேலைத்திட்டம், விருதோடை பாதைக்கு காபட் இடும் வேலைத்திட்டம், பாலசோலை பாதைக்கு காபட் இடும் வேலைத்திட்டம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களோடு விருதோடைக் குளத்தின் புணர்நிர்மான வேலைத்திட்டம் போன்றவை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றன. 

Disqus Comments