2013ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதலாவது தொகுதி ஹாஜி குழு இன்று வெள்ளிக்கிழமை புனித மக்கா நோக்கி பயணமாகிறது.
இந்த வருடம் இலங்கையில் இருந்து 2,240 ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளனர். இதன் அடிப்படையில் முதல் தொகுதியில் சுமார் 75 பேர் பயணமாகவுள்ளனர்.
முதலாவது தொகுதி ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் புத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாளை முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து ஹாஜிகளை ஏற்றிய விமானங்கள் சவூதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
