Friday, September 13, 2013

75 வயது மூதாட்டி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது தம்புள்ளையில் சம்பவம்

சில்லு நாட்காலியின் உதவியுடன் நடமாடும், கண்கள் தெரியாத 75 வயதான மூதாட்டியை தூக்கிகொண்டுச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

36 வயதான திருமணமுடித்த நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தம்புள்ளையிலேயே இடம்பெற்றுள்ளது. 

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மூதாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது மூதாட்டியின் மகள் வேலைக்கு சென்றிருந்ததுடன் வீட்டில் அந்த மூதாட்டி மட்டுமே இருந்துள்ளார். 

நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் அந்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற குறித்த நபர் தனது பெயரை மூதாட்டியிடம் கூறியுள்ளார்.

அதற்கு பின்னர் சில்லு நாட்காலியிலிருந்த மூதாட்டியை வீட்டுக்குள் தூக்கிச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில் பகல் சாப்பாடு கொண்டுவந்த பேத்தியிடம் சம்பவம் பற்றி மூதாட்டி தெரிவித்ததையடுத்தே இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் மூதாட்டியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மனைவி வெளிநாட்டில் தொழில்புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
Disqus Comments