எதிர் வரும் 14, 15ம் (நாளை, நாளை மறுதினம்) திகதிகளில் அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி எள்ளுச்சேனை வெள்ளைப்புறா மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் SHM முஸம்மில் தலைமையில் நடைபெறும் இந்த கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திர சகல துறை ஆட்டக்காரரும் தற்போதை இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெய சூரிய கலந்து சிறப்பிக்க உள்ளார். மேலும் அவருடன் மேல் மாகாண போக்குவரத்துத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நிமால் லான்ஸா அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளில் இது வரை 30 அணிகள் வரை பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. கலந்து கொள்ளும் அணைத்து அணிகளுக்கும் பந்து, துடுப்புமட்டை, விக்கட் உட்பட விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் நிமால் லான்ஸா அவர்களின் அணுசரனையில் வழங்கப்படவுள்ளதோடு முதலாமிடத்தைப் பெறும் அணிக்கு 25 000 ரூபா பணப்பரிசும், இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 15 000 ரூபா பணப்பரிசும் மூன்றாமிடத்தை பெறும் அணிக்கு 10 000 வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் தெரிவிக்கின்றது.