Tuesday, September 24, 2013

ஆசிரியரை மண்டியிட வைத்தவரின் மருமகன் தேர்தலில் தோல்வி

ஆசிரியரொருவரை மண்டியிட வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்தவின் மருமகன் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

ஆனந்த சரத் குமாரவிற்கு பதிலாக அவரது மருமகனான போபிடியகே நிலந்த விமலரத்ன இம்முறை வடமேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனந்தவுக்கு பதிலாக நிலந்த என்ற அடிப்படையிலேயே அவரது பிரசாரமும் அமைந்திருந்தது.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட நிலந்தவினால் வெறும் 11,728 வாக்குகளையே பெறமுடிந்துள்ளது.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அவருக்கு 15 ஆவது இடம்கிடைத்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மொத்தமாக 161,675 (59.10 %) வாக்குகளைப் பெற்றதுடன் 9 ஆசனங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments