Tuesday, September 24, 2013

ஜனாதிபதி இன்று ஐநாவில் 6வது முறையாக உரை


ஐக்கிய நாடுகள் சபை யின் 62வது பொதுச் சபை மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) உரையாற்றவுள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் ஆறாவது தடவையாக இம்முறை ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

2005 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 2006 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் முதலாவதாக உரையாற்றினார். 

அதனைத் தொடர்ந்து இம்முறை ஆறாவது தடவையாக அவர் இன்று உரையாற்றவுள்ளார். 

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தனது உரையில் விசேட கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Disqus Comments