ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான முதலமைச்சர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த கூட்டத்தில் மாகாண அமைச்சுக்களை யாருக்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.
போனஸ் ஆசனங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதும் மத்திய குழு கூட்டத்தில் இடம்பெறும் என சுசில் தெரிவித்தார்.
