Monday, September 23, 2013

வடக்கில் தனி நாடு அமைக்கப்படும்? ஜாதிக ஹெல உறுமய

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வெற்றியைப் பயன்படுத்தி, வடக்கில் தனி நாடு அமைக்கும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளர் உதய கம்மன்பில,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத்  தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

வடக்கில் கடந்த முப்பது ஆண்டுகளில் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இவ்வாறு செயற்படவில்லை. அதுமட்டுமின்றி, அரசாங்கத்தால் வடமாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியவில்லை.

வடக்கு மக்களின் இதயங்களில் போரினால் ஏற்பட்ட காயங்கள் இருக்கும். இந்நினைவுகள் அவர்களது இதயத்தில் இன்னும் உள்ளன எனத் தெரிவித்தார்.
Disqus Comments