Thursday, October 3, 2013

2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவா்பம் 21ம் திகதி

(TM)ஐக்கிய மக்கள் சுத்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத்திட்டத்தை நவம்பர் 21 திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வரவு செலவுத்திட்ட விவாதம் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதம் பற்றிய இறுதித்தீர்மானம் நாளை 1.30 மணிக்கு நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படுமென அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

அந்த வரவு-செலவு திட்டத்திற்கான நிதியொதுக்கீட்டுச்சட்டமூலம் அடுத்த வாரமளவில் சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Disqus Comments