Wednesday, October 2, 2013

முதியோருக்கான அதிசிறந்த நாடுகளில் இலங்கைக்கு 36 ஆவது இடம்

(TM) முதியோருக்கான அதிசிறந்த நாடு என்பதற்கான உலக சுட்டியில் இலங்கை 36 வது இடத்தையும் சுவீடன் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த சுட்டியில் ஆப்கானிஸ்தான் அதிதாழ் நிலையை பெற்றுள்ளது.

சுவீடனை தொடர்ந்து நோர்வே, ஜேர்மனி நெதர்லாந்து மற்றும் கனடா என்பன இடம்பிடித்துள்ளன.

உலக முதியோர் கவனிப்பு சுட்டியானது இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்போது முதியோரின் சமூக பொருளாதார நலன்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

உலகின் அதியுயர் செல்வந்த நாடான அமெரிக்கா எட்டாம் இடத்தில்தான் உள்ளது. ஐக்கிய இராச்சியம் முதல் பத்துக்குள் வரமுடியவில்லை. இலங்கை 36ஆம் இடத்தையும் பாளஸ்தீன் 89ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

பொலிவியா மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகள் அவற்றின் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் உயர் இடத்தை பிடித்துள்ளது.
பிறேஸிலும் சீனாவும் உயர் இடத்திலும் இந்தியாவும் ரஷ்யாவும் தாழ்வான இடத்திலும் உள்ளன.

இலங்கையிலுள்ள முதியோர் குடித்தொகை நல்ல அடிப்படை கல்வியிலும் சுகாதாரங்கள் சேவைகளிலும் நன்மை அடைந்துவருகின்றது. இலங்கை முதியோருக்கான அதிசிறந்த நாடு சுட்டி 57.3ஆக காணப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Disqus Comments