Friday, October 11, 2013

இலங்கையின் அமைச்சர் ஒருவருக்கு செலவழிக்கும் பணத்தால் ஒரு இராச்சியத்தையே நடத்த முடியும் - குமுறுகிறார் அனுர குமார

இந்த நாட்டின் அமைச்சர் ஒருவருக்கு செலவழிக்கு பணத்தால் ஒரு இராச்சியத்தையே நடத்த முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பால்மா பக்கற் ஒன்றுக்கு 290/=   வரி அறவிடுவதிலிருந்து திருமண பதிவுக்கு 5000/=  கட்டணம் அறவிடுவது வரை இந்த அரசு வரி அறவிடுவதிலிருந்து உழைக்கும் பெரும் பணத்தொகையை இந்த பெரும் அமைச்சர் பட்டாளத்தை நடாத்தி செல்ல அரசு செலவழிக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (10 ஒக்டோபர்) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்; இக்கருத்துக்களை அநுர குமாரா தெரிவித்தார்.

உலகில் அதிக சனத்தொகையை கொண்ட நாடு 135 கோடி மக்களை கொண்ட சீனா. சீனாவில் அமைச்சர்கள் 27 பேர் மாத்திரமே. அடுத்த அதிகம் சனத்தொகையை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் சனத்தொகை 120 கோடி இந்தியாவில் அமைச்சர்மார்களின் தொகை 35. 14 கோடி மக்கள் சனத்தொகையை கொண்ட ரசியாவில் 17 அமைச்சர்கள். அமெரிக்காவில் 24 அமைச்சர்கள். 22 கோடி மக்கள் சனத்தொகை. 12 கோடி மக்கள் சனத்தொகையை கொண்ட ஜப்பானில் 19 அமைச்சர்கள். 

ஆனால் 2 கோடி மக்கள் சனத்தொகையை மட்டும கொண்ட இலங்கையில் கபினட் அமைச்சர்கள் 57 பேர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தவிர 29 பிரதி அமைச்சர்மார்கள். செயற்திட்ட அமைச்சர்கள் 2 பேர். இது தவிர 9 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது போதாததற்கு 9 மாகாண முதலைமைச்சர்கள். மாகாண அமைச்சர்கள் 36 பேர். இப்படி அமைச்சர்கள் பட்டாளமொன்றையே அரசு நடாத்தி சொல்வதன் நோக்கம் என்ன?

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சென்ற காலங்களில் மாதத்துக்கு 121,000/=  ரூபா மின்சாரகட்டணம் செலுத்தினார். 5000 மின்விளக்குகள் கொண்டு வெசாக் தோரணம் செய்து அதனை ஒரு வாரம் காலம் தொடர்ந்து ஒளிர விட்டாலும் இவ்வளவு பெரிய தொகை மின்கட்டணமாக வராது. இரவு இரவாக கெஹெலிய ரம்புக்வல்ல ஏதாவது வெசாக் தோரணம் ஏதாவது செய்கிறாரோ தெரியில்லை என அநுர தெரிவித்தார்.

அமைச்சர்மார்களின் மின்கட்டணத்தை செலுத்துவது நாட்டு மக்கள். அமைச்சர் ஒருவருக்கு அரசு 2 வாகனங்களை கொடுக்கிறது. பேற்றோலுக்கு வருடத்துக்கு 150,000/=  கொடுக்கிறது. தொலைபேசி கட்டணங்களுக்காக 15,000/=  கொடுக்கிறது. ஆனால் அமைச்சர்மார்கள் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செலுத்துவது 1,000/=  மாத்திரமே மற்றும் மின்சார கட்டணம் செலுத்துவது 1,000/=  மாத்திரமே.

அமைச்சர் ஒவ்வொருவருக்கும் காரியாலய சேவைக்காக 15 பேரை வழங்குகின்றனர். இதில் 5 பேருக்கு வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு 15,000/=  வீதம் பெற்றோலுக்காக வழங்கப்படுகிறது. 5 பேருக்கு தொலைபேசி கட்டணமாக 2,000/=  வீதம் வழங்கப்படுகிறது. இதற்கு மேலாக 6,500/=  விநோதங்கள் மற்றும் உபசரிப்புகளுக்காக அரசு வழங்குகிறது.

நாங்கள் நாட்டு மக்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இப்படியான அநியாயங்களை பண விரயத்தை நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று தான். அழுது புலம்பும் அமைச்சர்களுக்கு பிள்ளைகள் பால் கேட்டு அழும்போது வாய்க்கு ஒரு சூப்பியை போடுவது போல் அமைச்சர் பதவி என்ற சூப்பியை வாயில் போட்டுவிடுவார்கள். நாட்டின் பணத்தில் 62 வீதத்தை பராமரிப்பது ராஜபக்ஷ குடும்பம். மீதி 38 வீதத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய அமைச்சர் பட்டாளம்? அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் முக்கிய அமைச்சுக்களை ஜனாதிபதி தனக்குக் கீழ் வைத்துக் கொண்டுள்ளார்.]

பிரதி அமைச்சருக்கும் அமைச்சருக்கு வழங்கும் அத்தனை வசதிகளும் வழங்கப்படும் என வர்த்தமாணியில் அறிவித்தார்கள். அமைச்சரின் கீழ் 5 வருடம் பணியாற்றினால் அந்த பணியாளுக்கு ஓய்வூதியும் கிடைக்கும்.

மங்கள அமைச்சராக இருக்கும் போது அமைச்சரவை பணியாளரில் ஒருவராக அநார்கலி இருந்தார். அந்த நேரத்தில் அநார்கலிக்கு 17 வயது இருக்கும். அநார்கலி 22 வயதுவரை சேவையாற்றி இருந்தால் அநார்கலியும் ஓய்வூதியம் பெறும் ஒரு பெண்ணாக இருந்திருப்பார். ஓய்வூதியம் பெரும் பெண் என்றவுடன் எம் மனதில் எப்படியான ஒரு உருவம் தோன்றும் என நினைத்துப் பாருங்கள்.

நாட்டுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை அமைச்சர்மார்கள் கூத்தடிப்பதற்காக வீணடிக்கின்றனர். அவர்கள் தங்களை மக்களின் பிரதிநிதி என்று அழைத்துக் கொண்டாலும் இவர்கள் கப்பம்காரர்கள். இவற்றை நாட்டுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுமக்கள் புரிந்து கொள்ளும் வரை நாம் இப்படியான தகவல்களை வெளியிட்டுக் கொண்டேயிருப்போம்.
(Mawbima)

Disqus Comments