Friday, October 11, 2013

குருநாகல், புத்தளம் மாவட்டங்கள் வேறுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படும் : முதலமைச்சர் தயாசிறி

வடமேல் மாகாணத்துக்குட்பட்ட குருநாகல், புத்தளம் மாவட்டங்கள் இன, மத பிரதேச வேறுபாடுகளின்றி அபிவிருத்தி செய்யப்படும், மாறாக புத்தளம் மாவட்டம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படமாட்டாது என வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

வட மேல் மாகாண கடற்றொழில் விவசாய சிறுநீர்ப்பாசன கமநல சேவைகள் கால்நடை வள அமைச்சராக நியமிக்கப்பட்ட சனத் நிசாந்த பெரேராவின் அமைச்சு கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இம் மாகாணசபையை புதிய முகங்களுடனும் பழைய அனுபவம் பெற்றவர்களின் அனுசரணையுடன் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வோம். சகல வளங்களும் குருணாகல் மாவட்டத்துக்கே வழங்கப்படுவதாகவும் புத்தளம் மாவட்டம் மாற்றாந்தாய் மனப்பான்மையாக நடத்தப்படுவதாகும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்விமர்சனங்களுக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கவுள்ளேன்.

அதேவேளை, இம்மாகாணத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைய ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உதவியைக் கொண்டு சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும். இதனால் பலருக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் கூறினார்

Disqus Comments