Tuesday, October 22, 2013

ஹலாலுக்கு எதிரான பொதுபல சேனாவின் பேரணி கொழும்பில் இருந்து கண்டி வரை

பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிரான பேரணி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது.
 
கிருலப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனாவின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இப்பேரணி ஆரம்பமானது
 

கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை செல்லும் இப்பேரணி அங்கு இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளின் பின்னர் நிறைவடையவுள்ளது.
 
இது தொடர்­பாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேலும் தெரி­விக்­கையில்,
கடந்த காலங்­களில் பொது­ப­ல­சேனா ஹலால் சான்­றி­த­ழுக்கு எதி­ரான போராட்­டத்தை ஆரம்­பித்­தது.
 
இதன் பின்னர் இதனை வாபஸ் பெறு­வ­தா­கவும் உணவுப் பொருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் வழங்­கப்­ப­ட­மாட்டா­தென்றும் முஸ்லிம் அமைப்­புக்கள் உறு­தி­ய­ளித்­தன.
 
ஆனால், அந்த உறுதி மொழிகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்டு மீண்டும் உணவுப் பொருட்­க­ளுக்­கான ஹலால் சான்­றி­தழ்கள் வழங்­கப்­ப­டு­கி­றது.
 
இது உறுதி மொழியை மீறிய நம்­பிக்கை துரோ­கத்­த­ன­மாகும்.
 
இலங்கை சிங்­கள பெளத்த நாடு. இங்கு உணவு வகை­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் அவ­சி­ய­மில்லை. எனவே எமது நாட்­டி­லி­ருந்து ஹலால் முற்­றாக ஒழிக்­கப்­பட வேண்டும். அதற்­கான போராட்­டத்­தையே இன்று ஆரம்­பிக்­கின்றோம்.


( படங்கள் உதவி வீரகேசரி ஒன்லைன்)
Disqus Comments