Thursday, October 10, 2013

இலங்கையை தனிச்சிங்கள நாடாக மாற்றிக்காட்ட எம்மால் முடியும் : குணதாச அமரசேகர

அர­சாங்­கத்தை காப்­பாற்ற வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. நாட்­டையும் சிங்­க­ள­வர்­க­ளையும் காப்­பற்­றவே நாம் முயற்­சிக்­கின்றோம். இலங்­கையை தனிச் சிங்­கள நாடாக மாற்­றிக்­காட்­டவும் எம்மால் முடியும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்­துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒவ்­வொரு வார்த்­தை­களும் தனி நாட்டுக் கோரிக்­கை­யா­கவே அமைந்­துள்­ளன. சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் ஆகியோர் இன­வாதம், பிரி­வினை வாதம் பேசும்­போது நாம் ஏன் பேசக்­கூ­டாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­போடு அர­சாங்கம் இணைந்து செயற்­ப­டு­வது பற்­றியோ, அர­சாங்கம் அழிவதைப் பற்றியோ எவ்­வித கவ­லையும் எமக்கில்லை. நாட்டையும் நாட்டில் வாழும் அப்பாவி சிங்­க­ள­வர்­க­ளையும் காப்­பாற்­றவே நாம் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்றோம். வடக்கு வாழ் தமி­ழர்கள் மீது கூட்­ட­மைப்பு அக்­கறை காட்­டு­வதைப் போன்றே நாட்டின் சிங்­க­ள­வர்கள் மீது நாமும் அக்­கறை காட்­டு­கின்றோம்.

இலங்­கையில் இன்­னொரு யுத்தம் ஏற்­பட்டால் தமி­ழர்­களைக் காப்­பாற்ற சர்­வ­தேச நாடு­களும் முன்­வரும். ஆனால்,சிங்­க­ள­வர்கள் தொடர்பில் குரல் கொடுக்க எவரும் வர­மாட்­டார்கள். இதை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

மேலும், விக்கி­னேஸ்­வரன், சம்­பந்தன் ஆகி­யோரின் கருத்­துகள் அனைத்தும் தனி நாட்டுக் கோரிக்­கையின் அடித்­த­ள­மாகும். சி.வி.விக்­னேஸ்­வரன் பி.பி.ஸி செய்திச் சேவைக்கு அண்­மையில் வழங்கிய செவ்­வி­யினை அர­சாங்கம் கேட்­க­வில்லை என்றே நான் நினைக்­கின்றேன். அதை ஜனா­தி­பதி கேட்­டி­ருப்­பா­ராக இருந்தால் விக்­கினேஸ்­வரன் ஜனா­தி­பதி முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்­தி­ருக்­கவே மாட்டார்.

அர­சாங்கம் தெரிந்தே தவறு செய்­கின்­றது. இத் தவறில் இருந்து தம்மை பலப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­படும். மக்­களே அர­சாங்­கத்தை மாற்ற முன்னர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மக்­க­ளுக்கு நல்­லதை செய்து நாட்­டையும் சிங்­கள மக்­க­ளையும் காப்­பாற்ற வேண்டும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இந்­தி­யா­வுடன் கைகோர்த்துக் கொண்டு அர­சாங்­கத்தை ஆட்­டி­வைக்க நினைக்­கின்­றனர். அர­சாங்­கமும் இதைப் புரிந்து கொள்­ளாது இந்­தி­யாவின் சொல்­லுக்கு கட்­டுப்­பட்டு நடக்க நினைக்­கின்­றது. இதன் விளை­வுகள் பார­தூ­ர­மாக அமையும் என்பதை அரசாங்கம் வெகுவிரைவில் புரிந்து கொள்ளும்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய ஜனாதிபதி மீண்டு மொருமுறை நாட்டை கூறுபோட விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Disqus Comments