Thursday, October 10, 2013

இறக்காமம் பிரதேசசபை தவிசாளர் ஹக்கீமின் வேண்டுகோளின் படி பதவியை இராஜிநாமா

(TM)அம்பாறை, இறக்காமம் பிரதேசசபை தவிசாளர் எம்.ஐ.நைசர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின்படியும் கட்சியின் நலன் கருதியும் இப்பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக அவர் தெவித்துள்ளார்.

இராஜிநாமா கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு புதன்கிழமை இரவு அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Disqus Comments