Thursday, October 10, 2013

இலங்கையின் முதலாவது தனியார் பல்கலைக்கழகம் மீரிகமயில்

இலங்கையில் முதலாவது தனியார் பல்லைக்கழக வளாகத்தை நிறுவ வகை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றம் நேற்று புதன்கிழமை அங்கீகரித்தது.

இதன்படி ஐக்கிய இராச்சியத்தின் மத்திய லங்னாஷயர் பல்கலைழைகத்தின் வளாகம் மீரிகமவில் அமையவுள்ளது.

இளவரசர் சாள்ஸ் பொதுநலவாய மாநாட்டுக்கு வரும்போது இந்த புதிய பல்கலைக்கழக வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார்.

இந்த வளாகம் மீரிகமவில் 120 ஏக்கர் காணியில் தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமையவுள்ளது.

இந்த வர்த்தமாணி அறிவித்தல் மீதான விவாதத்தை தொடக்கிவைத்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த திட்டத்தில் 120 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படுமென கூறினார்.

இந்த வளாகத்தில் 10இ000 மாணவர்கள் கல்வி கற்கமுடியுமென அவர் கூறினார்.

வெளிநாட்டு கல்விக்காக வருடம் தோறும் 16இ500 மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் அந்நிய செலவாணி ஒதுக்கத்தில் பெரும் நெருக்கடி ஏற்படுகின்றது என அவர் கூறினார்.

இந்த பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தில் 5ஆம் இடத்தில் உள்ளது. இதில் 35இ000 மாணவர்கள் உள்ளனர். இதன் வளாகங்கள் சைப்பிரஸ்இ சீனா ஆகிய நாடுகளிலும் அமைந்துள்ளதென்றும் அவர் கூறினார்.

தனியார் பல்கலைக்கழகங்கள் அமைவதை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கவுள்ளது ஆயினும், உயர்கல்வி அமைச்சின் கண்காணிப்பின்கீழ் இவை இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த பல்கலைக்கழகத்தை முதலீட்டு சபையின்கீழ் அமைப்பதை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கின்றதென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அகில விராஜ் காரியவாசம் இவ் விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது கூறினார்.
Disqus Comments