Monday, October 14, 2013

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு ஒபாமாவிடம் கவலை தெரிவித்த மலாலா!

அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்களால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சிறுமி மலாலா கவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரச்சாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவி தலிபான்களால் சுடப்பட்டு பலத்த காயம் அடைந்து, உயிருக்கு போராடிய நிலையில் இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது. இந்நிலையில், மலாலாவின் கல்வி பணிகளை பாராட்டுவதற்காக வெள்ளை மாளிகைக்கு வரும்படி அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று வெள்ளை மாளிகைக்கு சென்ற மலாலாவை ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் அன்புடன் வரவேற்று பாராட்டினர். அப்போது அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்களால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக மலாலா கவலை தெரிவித்தார்.
Disqus Comments